1ம் தர மாணவர் சேர்க்கைக்கு பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையை இலஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பண்டாரவளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் இன்று (20) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் படி, குறித்த அதிபர் மாணவரை தரம் 1ல் சேர்ப்பதற்காக, பத்து சீமெந்து மூட்டைகளுக்கான 18,520 ரூபா தொகையை பாடசாலைக்கு முன்பாக அமைந்த வியாபாரியிடம் செலுத்துமாறு கூறியதாகத் தெரிகிறது.
முறைப்பாட்டாளர் பணத்தை செலுத்தியதையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணையை முன்னெடுத்ததன் மூலம் சம்பந்தப்பட்ட அதிபர் கைது செய்யப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1