Pagetamil
கிழக்கு

மழையால் சேதமடைந்த வீதிகள்: அதிகாரியின் செயல்

நேற்றைய தினம் (18.01.2025) குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட வேலூர் கிராமத்தில் சேதமடைந்த வீதிகள் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளரால் பார்வையிடப்பட்டது.

கடந்த மாதம் ஏற்பட்ட தொடர்ச்சியான மழை காரணமாக குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட வேலூர் கிராமத்தில் அமைந்த வீதிகள் பல சேதமடைந்தன. இந்நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளின் பெயரில் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித் அவர்களால் சேதமடைந்திருந்த வீதிகள், சம்பந்தப்பட்ட இடங்கள் நேரில் சென்று பார்வையிட்டப்பட்டது.

இதன்போது, சேதமடைந்த வீதிகளை விரைவில் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செயலாளர் உறுதியளித்தார்.

கிராம மக்களின் தேவைகளுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்று உறுதி செய்யப்பட்ட இந்த நிகழ்வு, பிரதேச மக்களிடையே நம்பிக்கையையும் வரவேற்பையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

east tamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

east tamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

east tamil

குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்

east tamil

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!