காரைதீவு நேரு சனசமூக நிலைய வருடாந்த ஒன்றுகூடலும், 75 ஆண்டு பவள விழாவும்

Date:

காரைதீவு நேரு சனசமூக நிலையத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் 75ம் ஆண்டு நிறைவு விழாவுக்கான பெயர் பலகை திறப்பு வைபவம், கடந்த நேற்றைய தினம் (18) நிலைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நிலையத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக குழுவின் முன்னெடுப்பில் நடைபெற்ற இவ் விழாவில், நிலையத்தின் போசகரும், மூத்த இலக்கியவாதி மற்றும் ஊடகவியலாளருமான கலாபூஷண எஸ். நாகராசா உள்ளிட்ட பல்வேறு செயற்பாட்டாளர்கள், நிலையத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய அர்ப்பணிப்பை ஒப்புக்கொண்டு விசேடமாக கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், உறுப்பினர்களின் பிள்ளைகள் கல்வி சாதனைகளுக்காக பரிசில்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளை பெற்று சாதனை பெற்ற மாணவி தர்மேதா தர்மேந்திராவுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டுக்களும் வழங்கப்பட்டன.

75 ஆண்டுகள் கடந்த நேரு சனசமூக நிலையம், காரைதீவு மக்களுக்காக தொடர்ச்சியாக ஆற்றிவரும் சமூக சேவைகள், ஆழிப்பேரலை உள்ளிட்ட அனர்த்தங்களின் போது ஆற்றிய அர்ப்பணிப்பு சமூகப் பணிகள் என பல்வேறு சாதனைகளை பேராளர்கள் பாராட்டினர்.

பவள விழாவுக்கான முன்னேற்பாடுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், நேரு சனசமூக நிலையம் எதிர்காலத்தில் மேலும் பல சமூகப் பணிகளை நிறைவேற்றும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்