இலங்கையின் உப்பு தேவைகளை நிரப்புவதற்காக, இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமிலா இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து உப்பு இறக்குமதியை மேற்கொள்ள இரண்டு முக்கிய இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இறக்குமதி உப்பை தொழிற்றுறையினருக்கு விநியோகிக்கவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 31ஆம் திகதிக்கு முன்னர் மொத்தம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான விலைமனுக்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கைகள், நாட்டின் உப்பு தட்டுப்பாட்டை சரிசெய்யும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.