25.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

கொழும்பு Lady Ridgeway குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரின் வேண்டுகோளின் அடிப்படையில், மிகுந்த வறுமை நிலையில் இருக்கும் 13 வயது சிறுவனின் வாழ்க்கையை காப்பாற்றும் உதவி நாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இந்த சிறுவன், அப்லாஸ்டிக் அனீமியா எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, எலும்பு மச்சை செயலிழப்பு காரணமாக செங்குருதி, வெண்குருதி மற்றும் குருதி சிறுதட்டுகள் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படுவதால் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும் நோயாகும்.

அவரது உயிரை காப்பாற்ற அவசர எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை (Bone Marrow Transplant) மிக அவசியமாக தேவைப்படுகிறது. இந்த சிகிச்சை இலங்கையில் மிக அரிதாக வழங்கப்படும் மற்றும் உயர்ந்த செலவு தேவைப்படும் சிகிச்சை முறைமையாகும்.

சிகிச்சைச் செலவுக்கு பொதுமக்களின் பண உதவி மிகவும் அவசியமாகும் எனவும், இந்த சிகிச்சை உடனடியாக நடைபெறாவிட்டால், சிறுவனின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுவனின் குடும்பம் சிகிச்சைக்கான செலவை தாங்க முடியாத நிலையில், சிகிச்சைக்காக பண உதவியை எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்

Pagetamil

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தலைமறைவு: வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

‘யாழ் போதனா வைத்தியசாலை சர்ச்சைக்கு இதுதான் காரணம்’: தாதியர் சங்கம் சொல்லும் காரணம்!

Pagetamil

‘ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்’: அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி

Pagetamil

தேங்காய் விலை வழமைக்கு திரும்பும்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!