25.6 C
Jaffna
March 1, 2025
Pagetamil
கிழக்கு

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் பொங்கல் விழா

கும்புறுபிட்டி நாவற்சோலை கிராமத்தில் அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்றைய தினம் (2025 ஜனவரி 18ம் திகதி, சனிக்கிழமை), அறநெறி மாணவர்களுடனும் கிராம மக்களுடனும் ஒன்றிணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வின் முக்கிய தனிச்சிறப்பாக, கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் இணைந்து நடத்திய பட்டிமன்றம் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், அனைவரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும் வகையிலிருந்தது.

எண்ணம் போல் வாழ்க்கை குழுவினரும், பல்கலைக்கழக மாணவர்களும், நண்பர்களும், கிராம மக்களும், அறநெறி மாணவர்களும் கலந்து கொண்ட இவ் விழாவின் மூலம் கிராமங்களை நோக்கிய இலக்கியப் பயணம் இன்று அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினரால் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா பக்திபூர்வமாக அனுஷ்டிப்பு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!