மட்டக்களப்பு வாவியிலிருந்து இனந்தெரியாத சடலம் மீட்பு

Date:

மட்டக்களப்பு முனீச் விக்டோரியா நாட்புற வீதியில் உள்ள வாவியில், இன்று (18.01.2025) இனந்தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் பொலிஸார் வந்து சடலத்தை மீட்கவும், ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

சடலத்தின் அடையாளம், மரணத்தின் காரணம் ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் பின்னணி மற்றும் தொடர்புடைய தகவல்களை அறிய பொதுமக்கள் உதவி செய்யுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்