25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்

அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாதவரும், நீதியை சரியாக நிலைநாட்டும் நீதிவான் என போற்றுதற்குரிய நீதிபதியாகவும், இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியாகவும் 27 ஆண்டு பூர்த்தி செய்த பெருமைக்குரியவராக மதிப்பிற்குரிய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஐயா அவர்கள் விளங்குகிறார்.

05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2024 வரையான 27 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதி என்ற சிறப்பிற்குரியவராக ஐயா அவர்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய வடக்கு – கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிபதியாக இவர் திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகிறது..

1999ல் யாழ். செம்மணி புதைகுழி வழக்கு,1999ல் மன்னாரில் காமாலிக்கா கொலை வழக்கு, மடு தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு, மற்றும் லயன் எயார் குண்டு வெடிப்பு வழக்கு. 2000 – 2008 ஒன்பது ஆண்டுகள் கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வவுனியாவில் நீதிபதியாக கடமையாற்றியமை, ஜெயசிக்குறு தாக்குதல் காலம், யுத்த நிறுத்த காலம், மீண்டும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட யுத்த காலத்தில் வவுனியா நீதிபதியாக கடமையாற்றியமை, 2006ல் வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் கொலை வழக்கு, 2008ல் மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டமை, 2009ல் திருகோணமலை கோயில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கியமை, அந்த கொலை வழக்கு தீர்ப்பு உயர் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டமை, 2014ல் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றமை, 2015ல் கணவர் கொலை வழக்கில் இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை, தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை, 2015ல் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்று மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தில் 1 நீதிபதியாக வித்தியா கொலை வழக்கில் தனித் தீர்ப்பு எழுதி மரண தண்டனை விதித்தமை, 2018ல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று யாழ். இளைஞன் கொலை வழக்கில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தமை, 2022ல் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு, தயா மாஸ்டர் வழக்கில் இரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி விடுதலை செய்தமை உள்ளிட்ட பல வழக்குகளை 27 வருட காலப் பகுதியில் நியாயமான முறையில் நீதி தவறாமல் தீர்ப்பு வழங்கிய நீதாவானாக இவர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் காலமானார்

east tamil

வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

east tamil

Leave a Comment