25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் காலமானார்

ஈழ நாடகத்துறையின் பிதாமகரும், நாடக அரங்கக் கல்லூரியின் நிறுவுனரும், நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் ஐயாவின் மறைவு, ஈழத்தின் நாடகத் துறையில் பேரிழப்பாகும்.

முத்தமிழ்க் கலைகளில் முதன்மையாக கருதப்படும் நாடகக் கலைக்கு, ஈழத்தின் பாரம்பரியமும், கூத்துக் கலை மரபும் இணைந்து, அரங்க நாடகத் துறையில் புதுமையும், பேரெழுச்சியும் ஏற்படுத்திய கலாநிதி சண்முகலிங்கன், ஈழ நாடகத் துறையின் ‘பிதாமகர்’ என நாடக உலகில் போற்றப்படுகின்றார்.

இவரின் பங்களிப்பு ஈழத்து நாடகப் பாரம்பரியத்தை வளர்த்தும், புதுமைகளை உருவாக்கியும், நாடகக் கலை மையமாக பரவியுள்ளதை தாண்டி, தமிழ் நாடகத் துறைக்கு பெரும் ஆதரவும் அளித்துள்ளது என்றே பலரும் கூறுகின்றனர்.

நடிகராக, நாடக எழுத்தாளராக, நெறியாளராக, பன்மொழிப் புலமையாளராகப் பல்துறை திறமைகளின் சொரூபமாக தன்னை உருவாக்கிக் கொண்ட குழந்தை ம. சண்முகலிங்கன் அவர்கள், ஈழத்தின் நாடகப் பாரம்பரியத்தை முன்னோக்கி முன்னேற்றிய ஆளுமையாகத் திகழ்கிறார்.

நாடகக் கலையை முறைமைப்படுத்திய கல்வி வழியில் அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் பொருட்டு, இவரால் நாடக அரங்கக் கல்லூரி நிறுவைப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.இதன் விளைவாக, ஈழ நாடகப் பாரம்பரியத்திற்கும் அதனைத் துறைவிரும்பியாகத் தக்கவைத்த நாடக ஆளுமைகளுக்கும் புதுமையான அடையாளத்தை வழங்கியுள்ளார்.

ஆசிரியர், விரிவுரையாளர் மற்றும் நாடக நெறியாளராக அவர் வழங்கிய கலைப் போதனைகளால், ஈழ நாடகத் துறையின் அடுத்தடுத்த வளர்ச்சிகளுக்கும் அவரின் பங்களிப்பு மறுக்கமுடியாததாகும்.

அன்னையிட்ட தீ, மண் சுமந்த மேனியர், வேள்வித் தீ, எந்தையும் தாயும், ஆர்கொலோ சதுரர் ஆகியவற்றின் வழியாக தமிழ் நாடக உலகில் அழியாப் புகழைப் பெற்றவராக விளங்கிய கலாநிதி குழந்தை.ம.சண்முகலிங்கன் தன் உதிரத்தில் உறைந்த நாடகக் கலையால் அடுத்த தலைமுறையினரின் மேடைக் கலை திறன்களை உருவாக்கிய ஆளுமையாக அவர் மறைவிற்குப் பின்னும் தமிழின் நாடக உலகில் மிளிர்ந்துகொள்ளடிருப்பார் என்பதில் ஐயமில்லை என தெரிவிக்கின்றனர்.

இலங்கைத் தமிழ் நாடக மேடையின் முன்னோடியாக திகழ்ந்த அன்னாரின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு  ஈடு செய்ய முடியாத இழப்பு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்

east tamil

வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

east tamil

Leave a Comment