இன்றைய தினம் (17.01.2025) வெருகல் பிரதேசத்துக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்களின் தலைமையில் வெருகல் பிரதேச செயலகம் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிரதம அதிதியாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கெளரவ அருண் கேமச்சந்திரா கலந்து கொண்டார். மேலும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ குகதாசன் மற்றும் கெளரவ இம்ரான் மஃரூப் ஆகியோரும் இந் நிகழ்வில் பங்குக்கொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் துறைசார் திணைக்கள தலைவர்கள், கிராம சேவகர்கள், துறைசார் உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் கிராமமட்ட குழுக்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டம் வெருகல் பிரதேசத்தின் மேம்பாடு மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முக்கியமான முறைமையாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.