27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார கட்டண திருத்தத்தின்படி, வீட்டுப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தால் குறைவடையும் நிலையில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் 21 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

உணவகங்களுக்கு 31 சதவீதமும் மற்றும் தொழில்துறைக்கு 30 சதவீதமும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்கள் 12% குறைக்கப்பட்டுள்ளன.

அரசு நிறுவனங்களுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தாலும் மற்றும் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தால் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட மின் கட்டண பட்டியல் பின்வருமாறு…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய கம்பனிகளுக்கு விற்கப்படும் திருகோணமலை விவசாய நிலங்கள்

east tamil

இலங்கை காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலக அதானி நிறுவனம் முடிவு?

Pagetamil

1947ஆம் ஆண்டு உறுதி…80களில் போராளிகள் இடித்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரையாக முளைத்த கதை: முழுமையான பின்னணி

Pagetamil

ஹிஸ்புல்லா, லெபனானை வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல்

east tamil

மின்தடைக்கான காரணத்தை நாளை சொல்வார்களாம்!

Pagetamil

Leave a Comment