நேற்றைய தினம் (15) யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கரையொதுங்கிய மர்ம படகில் இருந்து 18 புத்தர் சிலைகள் பொலிசாரால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த படகில் பௌத்த சமயத்தை தாங்கிய மரபு அம்சங்கள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து, சம்பவ இடத்தை பரிசோதித்த மருதங்கேணி பொலிசார், 18 புத்தர் சிலைகள் மற்றும் சில செப்பேடுகளை மீட்டுள்ளனர்.
தற்போது மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதோடு, இதுகுறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1