28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
சினிமா

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

மும்பை பந்த்ராவில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் வீட்டில் இன்று (16.01.2025) அதிகாலை வீடு புகுந்து கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

அதிகாலை 2.30 மணியளவில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டில் நுழைந்து, சயிப் அலிகானின் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

சத்தம் கேட்டு சயிப் அலிகான் அங்கு சென்றபோது, மர்ம நபர் கத்தியால் அவரை தாக்கி, பின்னர் அங்கிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சயிப் அலிகான் உடனடியாக மும்பையின் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய மர்ம நபரை கண்டறிந்து பிடிக்க விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சயிப் அலிகானின் உடல்நிலை குறித்து தொடர்ந்து அக்கறை வெளிப்படுத்தி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘‘சமந்தா விவகாரத்தில் நான் குற்றவாளியாக கருதப்படுவது ஏன்?’’ – நாக சைதன்யா ஆதங்கம்

Pagetamil

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

Leave a Comment