யாழ்ப்பாணம் வடமராட்சி புனிதநகர் புரட்சி முன்பள்ளியில் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணி ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வு நேற்று (14) காலை நடைபெற்றது. நிகழ்வில், கட்சித் தலைவர் போராளி சி. வேந்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பொங்கல் பானை ஏற்றும் பாரம்பரிய வைபவத்துடன் நிகழ்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து, முன்பள்ளி சிறார்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு போட்டிகள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் முக்கிய நிகழ்வாக, புனிதநகர் புரட்சி முன்பள்ளியின் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் அவர்கள் செய்யும் சேவையை பாராட்டி, அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்களின் ஆர்வமும் உற்சாகமும் விழாவை மேலும் சிறப்பித்தது.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கட்சித் தலைவர் போராளி சி. வேந்தன், பாரம்பரிய விழாக்களின் முக்கியத்துவம், ஒன்றிணைந்த சமூகத்தின் மகத்துவம், மற்றும் இளைஞர் தலைமுறையின் பங்களிப்பை விளக்கி உரையாற்றினார். அவர், கல்வி மற்றும் பாரம்பரியத்தை வளர்க்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து ஊக்குவிக்க கட்சி முனைப்புடன் செயல்படும் என உறுதியளித்துள்ளார்.