உக்ரைன்-ரஷ்யா போரில், ரஷ்யாவுக்காக சுமார் 10,000 வடகொரிய வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போர்ப் பயிற்சி குறைவால் திணறி வரும் இவர்களுக்கு, உக்ரைன் வீரர்களிடம் சிக்கினால் தற்கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா-உக்ரைன் போரில் மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை வழங்கியதுடன் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. இந்நிலையில், வடகொரிய வீரர்கள், குர்ஸ்கில் ரஷ்யாவுக்காக போராடி வருகிறார்கள். ஆனால் போர்ப் பயிற்சி இல்லாத காரணமாக பெருமளவிலான இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கினால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது தற்கொலைப் படை ஆக வேண்டும் என்று கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார். தென்கொரிய உளவு அமைப்பின் தகவல்களின் அடிப்படையில், உயிரிழந்த வடகொரிய வீரர்களின் உடல்களில் இப்படியான குறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த உத்தரவை மீறி, ஏராளமான வடகொரிய வீரர்களை உக்ரைன் உயிருடன் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் பிடியில் இருக்கும் உக்ரைன் வீரர்களை விடுவித்தால், வடகொரிய வீரர்களையும் விடுவிக்க தயார் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவு சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் உருவாக்கியுள்ளது. இதனால் போரின் மானுடரீதியற்ற நிலைமை மேலும் வலுத்து காணப்படுகிறது.