யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், 17 வயதுடைய மாணவன் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை ஜனவரி 10ம் திகதி இடம்பெற்றது. சுழிபுரம் – பெரியபுலோ பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அதேபோல், சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில், 43 வயதுடைய நபர் ஒருவர் ஒரு போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
இரு சந்தேக நபர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1