26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

இனவாத வெறியாட்டத்துக்கு நிறுத்தம்: வன்முறையாளர்களுக்கு சிறைத்தண்டனை எச்சரிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கையில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இனிமேல் இடமில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்கள். இன, மத வன்முறைகளை தூண்டுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை அனுபவிப்பார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம், பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 9 மாத சிறைத்தண்டனை விதித்ததையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்,

இசைவற்ற இந்நாட்டில் இன, மத அவமதிப்புகளை தூண்டுபவர்கள் இனிமேலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், சட்டத்தின் உரிமையை மதிக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், குற்றம் செய்வோர் எவராக இருந்தாலும் அவர்கள் தக்க தண்டனையை பெற்றே தீருவார்கள் என்றும், நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளை தேசிய மக்கள் சக்தி அரசு முழுமையாக ஆதரிக்கிறது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதிபடுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

east tamil

தெமோதர ஜங்சனில் லொரி விபத்து

east tamil

கனடாவில் துயரச்சம்பவம்: யாழ் வாசியும், குழந்தையும் விபத்தில் பலி!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் சிறப்பு ஏற்பாட்டு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

Pagetamil

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதி – ரவிகரன் எம்.பி.

east tamil

Leave a Comment