ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (06) கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைத்த போது, மக்களின் எதிர்பார்ப்பு குறித்து அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும், இதற்கான கலந்துரையாடல்களை திட்டமிட்டு, பொருத்தமான முறையில் முன்னெடுக்க போகிறோம். எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவிதமான நேரடி பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை எனவும், தொடங்கப்படாத நிலை நீடிக்கிறது எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெளிவுபடுத்தினார்.
தற்போது SJB மற்றும் UNP இடையிலான இணைப்பை ஆதரிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான இந்த முயற்சிகள், இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் புதிய பரிமாணத்திற்கான வழிவகையாக அமையலாம் என எண்ண இடமளிக்கிறது.