தற்போதைய அரசாங்கத்திற்கு ஆழமான மாற்றத்திற்கான ஆணையை நாட்டு மக்கள் வழங்கியிருப்பதால், அதனை நிறைவேற்றும் போது எதிர்ப்பவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படப்போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08.01.2025) பாராளுமன்றத்தில் .தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், இந்த சமூக மாற்றத்தில் அரசியல் அதிகாரம் மற்றும் மக்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடிமக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆழ்ந்த மாற்றத்திற்கான ஆணையை வழங்கியுள்ளனர். அந்த மாற்றம் ஒரு தனிப்பட்ட மாற்றம் மட்டுமல்ல, சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் நிகழ வேண்டிய மிகவும் சிக்கலான மாற்றமாகும். அத்தகைய மாற்றத்திற்கு செல்லும்போது, சவால்களும் அதை எதிர்க்கும் குழுக்களும் இருக்கலாம். இது ஒரு நிஜம். ஆனால் மாற்றத்தை எதிர்ப்பவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு நாங்கள் ஒருபோதும் எங்கள் திட்டங்களை ஒப்படைக்க மாட்டோம். நாங்கள் இந்த நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். மக்கள் வழங்கிய ஆணையை மதிக்கிறோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்கம் என்ற ரீதியிலும் எமது வேலைத்திட்டம் என்ற ரீதியிலும் இந்த சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம். நாம் எப்போதும் நம்பும் மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த சமூக மாற்றத்திற்கு ஒரு அரசியல் அதிகாரத்தின் பங்கேற்பு மட்டுமல்ல, மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகின்றது. மக்களிடம் மாற்றம் வர வேண்டும் என கருத்து வெளியிட்டதோடு, கெளரவ சபாநாயகர் அவர்களிடம், இந்த திட்டம் நிறைவடையும் போது, சூரியன் உண்மையில் பிரகாசிக்கும் என நாங்கள் நினைக்கிறோம். அவர்களிடமும் அந்த மாற்றம் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.