Pagetamil
இலங்கை

கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக் கழிவை உடனடியாக தடுக்க தவறின் சட்ட நடவடிக்கை – கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி

கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக்கழிவை உடனடியாக 24மணித்தியாலத்துக்குள் அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி இ.கஜேந்திரா தெரிவித்துள்ளார்.

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் செயற்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதிருந்தது. இதனால் பொது மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் இன்றைய தினம் உரிய இடத்திற்கு விஜயம் செய்த கரைச்சி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோர் நிலைமைகளை நேரில் அவதானித்து உரிய அறிவுறுத்தகல்களை வழங்கியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

3 வாரங்களில் 3,649 டெங்கு நோயாளர்கள்

Pagetamil

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

Leave a Comment