ஹங்வெல்ல பொலிஸார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
20 வயது மதிக்கத்தக்க, ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் வெளிநாடு செல்லும் செலவினங்களுக்காக பணத்தேவையை பூர்த்தி செய்ய ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட மாணவனிடம் மேற்கொண்ட விசாரணைகளின் படி, குறித்த மாணவன் தனது தனிப்பட்ட எதிர்கால கனவுகளை அடைந்து கொள்ள நிதி போதாமையால், குறித்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வெளிநாடு செல்வதற்காக சம்பாதித்து வந்துள்ளார் என என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த மாணவன் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ”லலித் கன்னங்கர” என்பவருக்குச் சொந்தமான ஐஸ் போதைப்பொருளை ஹங்வெல்ல, கொஸ்கம, பாதுக்க மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
பொலிஸார் மாணவனிடம் மேலும் விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள குழுக்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். மாணவனின் இவ்வகையான செயல், நாட்டின் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சமூகத்திற்கான தீங்குகளை குறித்தும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.