Pagetamil
இலங்கை

25% மின்கட்டண குறைப்புக்கான கோரிக்கை – ஓமல்பே சோபித தேரர்

மின்சார சபை இலாபமடைந்துள்ள இந் நிலையில் இம்முறை மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25 சதவீதத்திலாவது குறைக்க வேண்டும் என தேசிய மக்களவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (04) மின் பாவனையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், செல்வந்த தரப்பினரின் 35 பில்லியன் ரூபா மின்கட்டணம் நிலுவையில் உள்ளது. இந் நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்து நடுத்தர மக்களை பழிவாங்குவது முறையற்றதொரு செயற்படாகும்.

ஆகவே மின்சார சபை இலாபமடைந்துள்ள நிலையில் இம்முறை மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25 சதவீதத்திலேனும் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment