26.7 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை யாழ் கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது .

இதன் பொழுது முதன்மை நிகழ்வாக மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வனும் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் நினைவு உரைகள் இடம்பெற்றது.

மக்கள் மயப்படுத்தவேண்டிய அரசியல்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மேற்கொண்டார்.

இதன் பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ், யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் , பேராசிரியர்கள் , ஊடக நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் , பத்திரிகை பிரதம ஆசிரியர்கள் ,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வத்திராயனில் பொறுப்பின்றி செயற்படும் உத்தியோகத்தர்கள்

east tamil

ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்

east tamil

யாழ். பல்கலைக்கழகத்தில் ‘த நெயில்’ சஞ்சிகை வெளியீடு

east tamil

மருதானை பொலிஸில் தமிழ்ப் பெண் மரணம் – கொலையா?

east tamil

விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிக்கு நஷ்டஈடு அவசியம் : ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

east tamil

Leave a Comment