தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடத்தப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, அண்மையில் பரீட்சையில் மூன்று கேள்விகள் கசிந்ததாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்து, கசிந்த கேள்விகளுக்கான இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
இந்த முடிவு, கடந்த டிசம்பர் 31ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1