25.4 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இந்தியா

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முன்னெடுத்த விண்வெளியில் தாவர வளர்ப்புக்கான பரிசோதனையில், விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

விஞ்ஞானிகள் முதலில் ஏழு நாட்களுக்குள் விதைகள் முளைவிடும் என எதிர்பார்த்த நிலையில், அவை நான்கு நாட்களில் முளைத்தது ஒரு முக்கிய சாதனையாகும். விரைவில் அந்த காராமணி விதைகளில் இலைகள் வளருமென இஸ்ரோ பெரிதும் நம்புகிறது.

இவ்விசேட முயற்சியின் நோக்கம், விண்வெளியில் வேளாண்மை செய்யும் வாய்ப்புகளை ஆராய்வது மட்டுமல்லாமல், வருங்கால விண்வெளி காலனிகளுக்கு நிலையான உணவுத் திருத்தங்களை உருவாக்குவதற்கான முன்முயற்சியாகவும் அமைந்துள்ளது.

இச்சோதனையின் முக்கிய அம்சமாக, பி.எஸ்.எல்.வி-சி60 ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 24 சிறிய செயற்கைக்கோள்களில் ஒன்றான வி.எஸ்.எஸ்.சி CROPS துணை செயற்கைக்கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் காராமணி விதைகள் வைத்து பரிசோதிக்கப்பட்டன.

சிறிய மாத்திரை வடிவத்தில் உருவாக்கப்பட்ட இந்த தூண்டு பெட்டகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காராமணி விதைகளில் ஒன்றின் முளைப்பதைக் கொண்ட புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்த முதற்கட்ட வெற்றி, விண்வெளியில் வேளாண்மை சூழல் அமைப்பதற்கான ஒரு புதிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

Leave a Comment