கிளிநொச்சி பளை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பளை பகுதிக்கு கடலால் கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 25 கிலோ பெறுமதியான கஞ்சா நேற்றையதினம் (02.01.2025) வியாழக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டது.
வெற்றிலைக் கேணி கடற்பரப்பினால் கடத்திவரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொதிகள் சில பளைப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவல் அடிப்படையில் அவர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, இக் குளப் பகுதியை சோதனையிட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா போதைப் பொருள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக பளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை எடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.