தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றிய பிரதி அமைச்சர் மீது குற்றச் சாட்டு

Date:

தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றியதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாமல் கருணாரத்ன தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் இடம்பெற்ற ஆங்கில புத்தாண்டு நிகழ்வுகளின்போதே தேசியக் கொடி தவறான முறையில் ஏற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசியக் கொடியை இரண்டு வண்ணங்களுக்கு அருகில் கட்டி ஏற்றுவது வழக்கம் என்றும், ஆனால் இந்தமுறை சிங்கத்தின் வால் பக்கத்தில் கட்டி ஏற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இது தொடர்பிலான விரிவான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் தமது தரப்பு கதிரை சின்னத்தில் பழைய கூட்டணியிலேயே போட்டியிடுவுள்ளதாகவும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் கட்சியை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்