சாமிந்த ஹெட்டியாரச்சி புதிய பதவிக்கு நியமனம்

Date:

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் இடமாற்றம் பெற்று ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை நாளை (01.01.2025) பொறுப்பேற்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை வைபவம் இன்றைய தினம் (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 27.07.2023 முதல் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் குறுகிய காலத்தில் மாவட்ட மக்களுக்கு இன, மத, மொழி வேறுபாட்டின்றி அளப்பறிய சேவையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களின் பிரச்சினையை கேட்டறிய மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு, அவற்றை தீர்த்து வைப்பதிலும், உரிய திணைக்களங்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து செயற்படுவதிலும் தனித்தன்மை வாய்ந்தவராக விளக்கியுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை திறந்த பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவர் 2000 -2006 ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் உதவி செயலாளர், சிரேஸ்ட்ட உதவி செயலாளர், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் முதலான பதவிகளையும் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

குறித்த இந் நிகழ்வின்போது, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்