26.5 C
Jaffna
January 5, 2025
Pagetamil
ஏனையவை

சிறுவர்களில் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பு

தற்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் பல வகை வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகள் சுற்றுலா மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடுவதால் வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாவதே இதற்குக் காரணம் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி நோய், வயிற்றுப்போக்கு, கடுமையான குளிர், உடலில் சிவப்பு புள்ளிகள், காய்ச்சல் மற்றும் நீண்ட கால இருமல் ஆகியவை வைரஸால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் அறிகுறிகளாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால் இந்த நோய் ஒரு வைரஸ் என்பதால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே பராசிட்டமோல் கொடுப்பதும் ஓய்வு எடுப்பதும் மிகவும் அவசியமானது என்றும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சிறுவர்களுக்கு நோய் குணமான பிறகு தலைவலி அல்லது இருமல் வரக்கூடும் என்பதால், பெற்றோர்கள் தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளர்.

எந்த வகையிலும் இந்த வைரஸ் நிலைமைகள் உள்ள பிள்ளைகள் குளிப்பதற்கு அச்சப்படத் தேவையில்லை என்றும், வெதுவெதுப்பான நீரை உடலில் ஊற்றினால் காய்ச்சல் குறையும் என்றும் மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வித்தியாசமான பழிவாங்கல்: மணமகளின் இரகசிய படுக்கையறை வீடியோவை மணமேடையில் ஒளிபரப்பிய மணமகன்!

Pagetamil

ஒதியமலை படுகொலையின 37வது ஆண்டு நினைவு!

Pagetamil

Leave a Comment