முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக மண் தினம்: விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆளுநரின் பேச்சு

Date:

இன்றைய தினம் (31.12.2024) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதன் போது, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமை உரையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்துதரவேண்டும் என ஆளுநரைக் கோரியதுடன், சுற்றுலாத்துறை ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகளை முன்னெடுக்க நிதி ஒதுக்கீடு அதிகரித்துத்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் இவ்வாறு பல தினங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை. இப்போது ஐ.நா.வால் பல தினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும், அவ்வாறு ஒரு தினத்தை அறிமுகப்படுத்துவதென்றால் அதன் முக்கியத்தும் அல்லது பயன்பாடு இப்போது தேவைப்படுகின்றது என்பது அர்த்தம் எனகூறினார்.

இந்த மண்ணை இயற்கை சீரழிக்கவில்லை. மனிதன் தான் சீரழித்துக்கொண்டிருக்கின்றான். சகல வளமும் கொண்டது எங்கள் நாடு. அதைப்போல எமது மாகாணமும் சகல வளங்களையும் காலநிலையையும் கொண்டிருக்கின்றது. அப்படியான எமது மாகாணத்தில் விவசாயிகள் தங்களை இன்னமும் ஏழை விவசாயிகள் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும். அவர்களுக்கு நவீன முறைமையிலான விவசாயத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அவர்களின் உற்பத்தியையும், அதன் தரத்தையும் ஊக்குவிக்கவேண்டும். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள்.

அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது ஆகக்குறைந்த சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து நாம் செய்யவேண்டும். அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்க்கும் மனநிலையில் நோக்கிக் கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது.

அதிகாரிகளுடன் போராடவேண்டியிருப்பதாக அமைச்சர்களே கூறியிருக்கின்றனர். அது உண்மைதான். பல அதிகாரிகள் பிழையானவற்றுக்கு பழகிவிட்டார்கள். அவர்களை அதிலிருந்து மாற்றுவதற்கு பாடுபடவேண்டியிருக்கின்றது. எங்கள் வடக்கு மாகாணமும் அதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. நேர்மையானவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள் அல்லது பந்தாடப்படுகின்றார்கள். அதைப்போலத்தான் வசதிபடைத்தவர்கள் அரச திணைக்களங்களுக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதையுடன் விரைந்து சேவை வழங்கும் அதிகாரிகள், ஏழை எளிய மக்கள் வந்தால் அலைக்கழிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும்.

புதிய அரசாங்கம் மக்கள் நேய சேவையைக் கொண்டு செல்லவே விரும்புகின்றது. அரச அதிகாரிகள் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், என பல கருத்துக்களை ஆளுநர் இந் நிகழ்வின் போது பகிர்ந்துகொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆ. சிறி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

உலக மண் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்