கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்குளி சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (29) இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியொன்றில் 6 பேர் குறித்த நபரை கடத்தி செல்ல வந்ததாக கூறப்பட்டாலும், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் அதிகமானோர் வந்துள்ளதாகவும், போதைப்பொருள் தொடர்பான தகராறே இக்கடத்தலுக்கான காரணமெனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.