இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தைப் பற்றிய பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (30.12.2024) ஊவா மாகாணத்தில், மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டது.
இந்த மின்சார கட்டண திருத்தம் 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6 மாத காலக்கெட்டுக்கானது. இந்நிலையில், பொதுமக்களின் கருத்துக்களை பெறும் இந்த கருத்து கோரல் 2024 டிசம்பர் 17ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் மின்சார நுகர்வோருக்கான அனைத்து தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள, அனைத்து மாகாணங்களிலும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க குறிப்பிட்டுள்ளதாவது, இந்த ஆலோசனைகளின் பின்னர், 2024 ஆம் ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும்.