தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது
தென்கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் இருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம், முகான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களுடன் சென்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.