உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் சிகிரியாவைப் பாதுகாக்கும் விசேட திட்டம் ஒன்றிற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சிகிரியாவைப் பாதுகாக்கும் விசேட திட்டத்திற்காக 2.4 பில்லியன் ரூபா அல்லது 240 கோடி ரூபாவை வழங்குவதற்கு கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கலாசார நிதியத்தின் மேற்பார்வையில் தொல்லியல் திணைக்களத்தின் பூரண அனுமதியுடன் இத்திட்டத்தில் வீதி அபிவிருத்தி, மாற்று வழிப்பாதை அமைத்தல், சிகிரிய அருங்காட்சியகம், சிற்றுண்டிச்சாலை மற்றும் பயணச்சீட்டு கவுன்டர் போன்றவற்றின் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1