இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Date:

இந்திய முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.

இந்தியா​வின் 14வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்​சிங் கடந்த 1932 செப்​.26இல் மேற்கு பஞ்சாபில் (தற்​போது பாகிஸ்​தானில் உள்ளது) பிறந்​தவர். காங்​கிரஸ் மூத்த தலைவர்​களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்​ம​ராவ் தலைமையிலான அமைச்​சர​வை​யில் நிதி அமைச்​சராக பதவி வகித்​தார். பொருளாதார வல்லுநரான இவர் இந்தியா​வின் பொருளாதார தாராளமய​மாக்கல் கொள்​கை​யின் தொடக்​கத்​துக்கு வித்திட்டவர். ரிசர்வ் வங்கி​யின் கவர்னராக​வும் பதவி வகித்​துள்ளார். காங்​கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்​போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறை பிரதமராக பதவி வகித்​தார்.

மன்மோகன் சிங்​குக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளது. இந்த நிலை​யில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்​சுத்​திணறல் ஏற்பட்​டது. நினை​விழந்து மயக்​க​மும் ஏற்பட்​டுள்​ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு அவரை காண காங்​கிரஸ் கட்சி​யின் மூத்த தலைவர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்​தனர். மத்திய அமைச்சர் நட்டா​வும் எய்ம்ஸ் மருத்​துவ​மனைக்கு விரைந்து அவருக்கு அளிக்​கப்​படும் சிகிச்சை குறித்து கேட்​டறிந்​தார்.

தீவிர சிகிச்சை பிரி​வில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்தது. அவரது உடல்​நிலை மிகவும் கவலைக்​கிடமாக இருந்து வருவதாக மருத்​துவமனை வட்டாரங்கள் தெரி​வித்தன. இதற்​கிடையே, எய்ம்ஸ் மருத்​துவமனை வளாகத்​தில் துணை ராணுவப்படை குவிக்​கப்​பட்டு பாது​காப்பு ஏற்பாடுகள் பலப்​படுத்​தப்​பட்டன.

இந்நிலை​யில், மருத்துவ குழு​வினர் தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்றி மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ், ஒக்ஸ்போர்ட், பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் மன்மோகன் சிங். பஞ்சாப், டெல்லி பல்கலைக்கழகங்களில் பணியாற்றி உள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார்.

மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல் 1985 வரை பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தார். 1990-91 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் பணி யாற்றினார். மன்மோகன் சிங்குக்கு குர்சரண் கவுர் என்ற மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்​சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா,காங்​கிரஸ் தலைவர் மல்லி​கார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், தமிழக ​முதல்​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட பல்​வேறு ​மாநில ​முதல்​வர்​களும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்​.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புதுச்சேரி உள்விவகாரங்களில் தலையிட்டாரா இலங்கைத் தூதரக அதிகாரி?

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதித்...

யாழில் சைவசித்தாந்த பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கும் தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து...

கொத்துப் போட பிந்தியதால் உணவக ஊழியர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்