இந்தியாவுடனான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி

Date:

சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம் தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2371 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளது.

இதன்படி, கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய துறைகள் இத்திட்டத்தின் மூலம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் கீழ் 33 செயற்திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக கிழக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் என்பன இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான எதிர்பார்ப்புகளாகும்.

இதன்படி, கல்விக்காக 315 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்திற்காக 780 மில்லியன் ரூபாவும், விவசாயத்திற்கு 620 மில்லியன் ரூபாவும், கடற்றொழிலுக்கு 230 மில்லியன் ரூபாவும் உட்பட 33 திட்டங்களுக்காக இந்திய அரசாங்கம் 2371 மில்லியன் ரூபாவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்