போலி நாணயத்தாள்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள்

Date:

57 போலி 5000 நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்ட திகன பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலை மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.

திகன நகரில் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெல்தெனிய தலைமையக பொலிஸாரால் நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திகன பிரதேசத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய நான்கு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திகன நகரிலுள்ள வர்த்தக ஸ்தலமொன்றுக்கு வந்துள்ளனர். அங்கு வர்த்தகருக்கு வழங்கப்பட்ட நாணயத்தாள்கள் போலியானவை என வர்த்தகர் அடையாளம் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனால், தெல்தெனிய தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர சேனாதீர மற்றும் ஏனைய அதிகாரிகள் வந்து இந்த மாணவர்களை பரிசோதித்த போது நான்கு மாணவர்களிடமும் 4 ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் காணப்பட்டன.

தெரிந்தவர் ஒருவர் பொருட்களை வாங்குவதற்காக இந்த நோட்டுகளை கொடுத்ததாக இந்த மாணவர்கள் கூறியுள்ளனர். இதன்படி இம்மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாவின் மேலும் ஐம்பத்து மூன்று நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மாணவர்களுக்கு போலி நாணயத்தாள்களை வழங்கிய பிரதான சந்தேகநபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்