25.7 C
Jaffna
January 18, 2025
Pagetamil
உலகம்

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

உகாண்டா நாட்டில் புதுவிதமான டிங்கா டிங்கா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அதிக அளவில் பெண்கள், குழந்தைகளை தாக்குவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து உடல் நடுக்கத்துக்குள்ளாகின்றனர்.

கொரோனாவை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வைரஸ் தொற்றுகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று உகாண்டாவில் பரவி வருகிறது.

உகாண்டாவில் உள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் அதிகமானவர்கள் `டிங்கா டிங்கா’ என அவர்கள் நாட்டில் குறிப்பிடப்படும் மர்ம வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்தி தெரிவிக்கின்றன. இந்த வைரஸ், பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து தாக்குகிறது. அதிகப்படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற சிக்கல்கள் இவற்றின் முதன்மையான அறிகுறிகளாக உள்ளன. இது உடல் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து உடல் நடுங்கிக் கொண்டிருப்பதால், பார்ப்பதற்கு நடனமாடிக் கொண்டே இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பது கூட கடினமானதாக மாறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுவரையில் இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் ஒரு வார காலத்துக்குள் குணமடைந்து விடுவதாகவும். புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் இந்த நோய் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

டேன்சிங் பிளேக்: இதேபோன்று கடந்த 1518-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் டேன்சிங் பிளேக் எனப்படும் மர்மநோய் பரவியதாகவும், அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப்பாடின்றி உயிரிழக்கும் அளவுக்கு தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மர்ம நோய் காரணமாக சிலர் ஆடிக்கொண்டே இருப்பதால் இதற்கு டேன்சிங் பிளேக் காரணமோ என்று சிலர் அச்சத்தில் உள்ளனர்.

அறிகுறிகள் என்ன? – இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடற்ற உடல் நடுக்கம் ஏற்படுகிறது. மேலும், அவர்களுக்கு உடல் நடுக்கம் அதிகமாக இருப்பதால் அவர்கள் நடனமாடுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மேலும், நோயாளிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் பலவீனம் அடையும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிலர் பக்கவாதத்தை உணர்வை கொண்டுள்ளனர். அவர்களால் சிறிது தூரம் நடக்க முடிவதில்லை.

இதுகுறித்து புண்டிபுக்யோ மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டொக்டர் கியிடா கிறிஸ்டோபர் கூறியதாவது: தற்போது இந்த நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆன்டி-பயாடிக் மருந்துகளை மட்டுமே அளித்து வருகிறோம். அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைச்சாலைக்கு அனுப்பியுள்ளோம். நோயால் பாதிக்கப்படும் நபர்கள் சுமார் ஒரு வார காலத்தில் தேறி விடுகின்றனர். சிலர் மூலிகை வைத்தியம் மேற்கொள்கின்றனர்.

ஆனால், சரிபார்க்கப்படாத மூலிகை மருந்துகளை நம்புவதற்குப் பதிலாக மாவட்ட சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற உள்ளூர் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எதனால் பாதிப்பு? – இந்த டிங்கா டிங்கா வைரஸ் ஏற்படுவது எப்படி என்பது குறித்து அறிவியல் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த நோய் வருவது எப்படி என்பது குறித்து இதுவரை அறியமுடியவில்லை. இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருவகையான பரவும் வகையிலான வைரஸ் என்று டொக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இம்ரான் கானுக்கு 14 வருட சிறைத்தண்டனை

Pagetamil

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெய்லர் பிரிட்ஸின் நிதியுதவி

east tamil

உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Pagetamil

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

Leave a Comment