இராணுவ கொமாண்டோ பிரிவு அதிகாரி ஓட்டிச் சென்ற வண்டியுடன் மோதியதில் 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் அட்டாலிவெவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கணேமுல்ல கொமாண்டோ முகாமுக்குச் சொந்தமான கப் வண்டியொன்று அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தெள்ளுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர், ஹந்தபானகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதீத வேகமே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1