இலங்கை தமிழ் அரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு

Date:

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சீ.வீ.கே. சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தமிழரசுக் கட்சி 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு மருதானை எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் வைத்து தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அநீதி:

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக புதிதாக உள்வாங்கப்பட்ட பெண்...

மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகரின் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளின் இடையூறுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும்...

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்