தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

Date:

தனிப்பட்ட தகராறின் விளைவால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15.12.2024 ஞாயிற்றுக் கிழமை) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் 82 வயதுடைய பெண் ஒருவர் அவரது மகனால் தாக்கப்பட்டு இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தின் பின்னர், கல்பாய, பல்லேபெத்த பிரதேசத்தில் வசித்து வந்த 54 வயதுடைய மகன் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றதுடன், உடவலவ, குருமடயா பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...

திலீபன் சிலை விசாரணை: கஜேந்திரன் கொதிப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் தியாக தீபத்தின்...

செம்மணி எச்சங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி காபன் பரிசோதனை செய்வதில் எமக்கு நம்பிக்கையில்லை: காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்க செயலாளர் ஜெனிதா!

செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வில் மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவுக்கு காபன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்