26 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இலங்கை

ஃபெங்கால் புயல் இன்று கரையை கடக்கிறது!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெங்கால்” என்ற சூறாவளி புயல் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.

இது இன்று (30) பிற்பகலில் புயலாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மேல், வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மாலை அல்லது இரவில் நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-55) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதால் விபரீதமா?: அல்லைப்பிட்டியில் பெண்களுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

பேரன் பகிடியாக தள்ளியதால் 91 வயது மூதாட்டி உயிரிழப்பு: யாழில் சம்பவம்!

Pagetamil

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜெ. எஸ் அருள்ராஜ்

east pagetamil

கிளாலி மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கான நடமாடும் சேவை

Pagetamil

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment