யாழில் 2634 குடும்பங்கள் பாதிப்பு

Date:

யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும்,சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 266 குடும்பங்களைச் சேர்ந்த 932 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 371 குடும்பங்களைச் சேர்ந்த 1462 பேரும்,சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 416 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 294 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எழு பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்