27.5 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

2025 ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் காலமானதாகவும், சிலர் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர்.

புதிய வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், தேர்தல் திகதி தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வேலணை பிரதேச வைத்தியசாலை சிக்கலுக்கு சுமுக தீர்வு: 24 மணித்தியால சேவை தொடரும்!

Pagetamil

புலிகளால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆபத்து இல்லை – சரத் பொன்சேகா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

east tamil

Leave a Comment