யாழ்ப்பாணத்தை மிரட்டும் முகக்கவச கொள்ளையனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

Date:

யாழ் மாவட்டத்தில் முககவசம் அணிந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பொலிசார் சிசிடி கமரா மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

கோப்பாய் ,யாழ்ப்பாணம் பகுதிகளில் இரவு வேளையில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்தவரே இவ்வாறு சிசிடிவி கமராவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இரவு 1 மணி தொடக்கம் 3மணி இடைவெளியில் முகக்கவசம் அணிந்து சைக்கிளில் நடமாடுவதாகவும் இதுவரையான காலப்பகுதியில் 8 வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த வாரமளவில் யாழ் செட்டிதெரு வீதியிலும் திருட்டு சம்பவமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வங்கி , நிதிநிறுவனங்கள் ,கம்பெனிகளில் பணிபுரிவோர் மற்றும் வைத்தியர்களின் வீடுகளிலேயே இவ்வாறு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

எனவே பொதுமக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் சந்தேகநபரை கைது செய்ய உதவுமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்