உக்ரேனியத் தலைநகர் கீவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம், தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக மூடப்பட்டிருக்கிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சின் துணைத்தூதரகப் பிரிவு அது குறித்து அறிக்கை வெளியிட்டது.
வெகுதூரம் தாக்கக்கூடிய அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்குள் தாக்கலாம் என்று பைடன் நிர்வாகம் ஒப்புதல் தந்த பிறகு உக்ரேன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
அதன் பிறகு அமெரிக்கத் தூதரம் மீது ஆகாயத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அது மேற்கத்திய நாடுகளுடன் நேரடி மோதலுக்கு இட்டுச் செல்லலாம் எனப் பல மாதங்களாக ரஷ்யா எச்சரித்து வந்தது.
அமெரிக்க ஏவுகணைகளைக் கொண்டு உக்ரேன் ரஷ்யாவைத் தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சென்ற மாதம் (அக்டோபர்) கூறியிருந்தார்.
அமெரிக்க தூதரகத்தில் எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைன் தலைநகரிலுள்ள தமது தூதரகங்களை இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் என்பனவும் மூடியுள்ளன.




