Pagetamil
இலங்கை

வகுப்புக்கு ‘கட்’ அடித்த மாணவிகள் மீது ஆசிரியைகள் தாக்குதல்… மாணவி பலி: இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பாடசாலையில் இரண்டு ஆசிரியர்களின் தாக்குதலால் தலையில் காயம் ஏற்பட்டு ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வென்னப்புவ பிரதேச பாடசாலையைச் சேர்ந்த 16 வயது சிறுமி அண்மையில் உயிரிழந்துள்ளார்.

அவர் மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கே.எம். ரமிஷா தினிதி தாமெல் 16 வயது மாணவியே உயிரிழந்தார்.

. ஆயா வென்னப்புவ Martin de Forres மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார்.

ஓகஸ்ட் 9 ஆம் திகதி, வென்னப்புவ Martin De Pores மகா வித்தியாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. வகுப்பறையிலிருந்து வெளியேறிய மேற்படி மாணவியும், இரண்டு நண்பிகளும், திரும்புவதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதற்காக ஆசிரியர்கள் தண்டித்த சம்பவம் நிகழ்ந்தது. தாமதம் குறித்து முரண்பட்ட பதில்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டி ஆசிரியர்கள் அவர்களை அடித்ததாகவும், மண்டியிடச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியையே மாணவிகள் மூவரையும் கையால் தாக்கியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், பாடசாலையின் பிரதி அதிபரும் சம்பவம் தொடர்பில் விசாரித்து உயிரிழந்த மாணவியின் முகத்தில் கையால் தாக்கி வெயிலில் மண்டியிடச் செய்துள்ளார்.

பின்னர் உயிரிழந்த மாணவி மயக்கமடைந்துள்ளார்,. இதையடுத்து ஆசிரியர்கள் இருவரும் மாணவியை வகுப்பறைக்குள் அழைத்துச் சென்று மேசையில் படுக்க வைத்து,  பெற்றோரை அழைத்துள்ளனர்.

தாம் பாடசாலைக்கு சென்ற போது, மகள் சுயநினைவின்றி இருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.

பெற்றோர் மாணவியை மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ராகம பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, மூளையில் உள்ள நரம்பு வெடித்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட சிக்கலினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இரு பெண் ஆசிரியைகளிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், 20 நிமிடங்களான மாணவிகள் காணாமல் போயிருந்ததாகவும், அவர்களிடம் வினவிய போது முன்னுக்குப்பின் முரணாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். மாணவிகளின் கால்களில் அடித்து மண்டியிட வைத்ததாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

39 மற்றும் 57 வயதுடைய இரு ஆசிரியர்களும் முதலில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் செப்டம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர், ஆனால் நவம்பர் 13ஆம் திகதி மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து நவம்பர் 14 அன்று மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீட்டுச்சாப்பாடு கேட்கும் தென்னக்கோன்!

Pagetamil

தையிட்டி சட்டவிரோத விகாரையில் மற்றொரு சட்டவிரோத கட்டிடம்

Pagetamil

பெட்டிசன் அனுப்பியவருக்கு நேர்ந்த கதி: வடக்கு விவசாய திணைக்கள சிக்கலில் மற்றொரு சுவாரஸ்ய சம்பவம்!

Pagetamil

பேஸ்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட 15 யுவதிகளும், 61 இளைஞர்களும் கைது!

Pagetamil

‘தமிழரசுக் கட்சியிலுள்ள ராஜபக்ச அவதாரம் இவர்’: சாணக்கியனை வறுத்தெடுத்த பிமல்!

Pagetamil

Leave a Comment