25.6 C
Jaffna
March 1, 2025
Pagetamil
இலங்கை

விருப்பு வாக்கு வரலாற்றில் சாதனை படைத்த விஜித ஹேரத்

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

அதேநேரம் இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளை பெற்றிருந்தார்.

இதற்கு முன்னதாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சாதனையை மஹிந்த ராஜபக்சவே வைத்திருந்தார்.

அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

எனினும் இம்முறை தேர்தலில் அவரின் அந்த சாதனையை ஐக்கிய மக்கள் சக்தியின் இரு பிரதான வேட்பாளர்களும் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 2015 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 500,566 வாக்குகள் பெற்றார்.

1994 பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தில் பொது முன்னணியின் கீழ் போட்டியிட்டு 464,588 வாக்குகளைப் பெற்றார்.

2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட பசில் ராஜபக்ஷ 425,861 வாக்குகளைப் பெற்றார்.

விகிதாசார வாக்களிப்பு முறையின் படி 1989 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான அனைத்து தேர்தல் முடிவுகளிலும் விஜித ஹேரத் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் – கஜேந்திரகுமார்

Pagetamil

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

Pagetamil

இனிய கற்பனை: எப்போது திகட்டும் என்.பி.பி?

Pagetamil

ப்ளூமெண்டல் ரயில் கடவை நாளை பூட்டு

Pagetamil

புதிய வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!