25.4 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் மணிவண்ணன்: கோரிக்கை!

தேசிய மக்கள் சக்தியினரின் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படுவார்கள் எனில் அவர்களுக்கு தமிழ் கட்சிகள் ஆதரவு அளிக்கும். அதற்காக தமிழ் மக்கள் நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க தேவையில்லை. இதனை நான் இனவாதியாக கூறவில்லை. ஒரு இனப்பற்றாளனான தமிழ் மக்களிடம் கோருகிறேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரின் சமூக மேம்பாட்டு கழகத்தின் அரசியல் பிரிவினர் தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் போட்டியிடும் எமக்கு ஆதரவை தந்துள்ளனர்.

காரைநகர் பிரதேச சபையை தமது காலத்தில் சிறப்பாக நிர்வகித்தவர்கள். மக்கள் மத்தியில் நற்பெயரை கொண்டவர்கள். அவர்கள் தமது முழு ஆதரவையும் எமது தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் செல்வேந்திரா தலைமையிலான குழுவினரும் தமது ஆதரவை எமக்கு வழங்கியுள்ளனர்.

நாமும் அந்த மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறாக தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவு தளம் பெருகி வருகின்றது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மற்றைய கட்சிகள் எமக்கு எதிராக கீழ்த்தரமான வேலைகளை செய்ய தொடங்கியுள்ளனர்.

போலி முகநூல்களில் பொய்யான தகவல்களை பரப்புதல், எமக்கு எதிரான போலி பிரச்சாரங்களை முன்னெடுத்தல் போன்றவற்றை செய்ய தொடங்கியுள்ளனர். தேர்தல் பரப்புரை காலம் முடிவடையுள்ள நிலையில் எமக்கு எதிரான கருத்துக்களை பரப்ப அரச இயந்திரங்களுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம்

எனவே தமிழ் மக்கள் அவர்களில் போலி பிரச்சாரங்களை நம்பாது விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் தகவல்கள், விபரங்கள் விளக்கங்கள் தேவை எனில் எம்மை அணுகி அவற்றை தெளிவு படுத்தி கொள்ளலாம்.

மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்கள் மீண்டும் தமக்கு கால நீடிப்பு கோரி தமிழ் மக்கள் ஆணையை கேட்டு நிற்கின்றனர். அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாதவர்கள். தற்போது அபிவிருத்தி வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து உள்ளவர்களை இலக்கு வைத்து தாம் அமைச்சு பதவியை ஏற்பது தொடர்பாக சிந்திக்கின்றோம் என கூறி அவர்களின் வாக்குகளை பெற முனைகின்றார்கள். அதற்கு தமிழ் மக்கள் இடமளிக்க கூடாது தமிழரசு கட்சி உள்ளிட்டவர்களுக்கு அளிக்கும் வாக்கு வீணானதே ..

தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என கோருகிறேன். இது இனவாதம் அல்ல இனப்பற்று .மற்றைய இனங்களை அழிப்பவனே இனவாதி. தன் இனம் நல்லா இருக்க வேண்டும் என சிந்திப்பவன் இனவாதி அல்ல. அவன் இனப்பற்றாளன். நான் ஒரு இனப்பற்றாளனாக தமிழ் கட்சிகளுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கோருகிறேன்.

சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்து இங்கிருந்து தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றுக்கு அனுப்பினால் அந்த கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் போது, அவர்களுக்கு எதிராக கருத்து கூற முடியாது கட்சி கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் மௌனிகளாக இருப்பார்கள்.

ஜே.வி.பி யினர் தான் தற்போது தேசிய மக்கள் சக்தியாக மாறியுள்ளார்கள். அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எனக்கு தெரியவில்லை.

அவ்வாறு அவர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டு தமிழர்கள் நலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்டால் தமிழ் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவை வழங்கும். அதற்காக அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து அவர்களுடன் இரண்டற கலக்க வேண்டும் என்றில்லை.

எனவே தான் ஒரு இனப்பற்றாளனாக கூறுகிறேன் நாங்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் வேட்பாளர்களை யாரென்றே தெரியவில்லை. அவர்களின் ஆளுமைகள் என்ன ? அவர்கள் எப்பேற்பட்டவர்கள் என யாருக்கும் தெரியாது.

தமிழ் மக்கள் கூட்டணியினர் மாத்திரமே  எதனை செய்தோம். என்ன செய்ய போகிறோம் என தெளிவான கொள்கைகள் திட்ட வரைபுகளுடன் செயற்படுகிறோம்

ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்து ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மான் சின்னத்திற்கு வாக்களித்து எம் இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் என கோருகிறேன் என மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதம்

east tamil

அனுர அரசு இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்

Pagetamil

ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் இல்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

புதிய வருடத்தில் ஆரம்பமாகிய “க்ளீன் ஶ்ரீலங்கா”

east tamil

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விநியோகம்

east tamil

Leave a Comment