வெளிநாட்டுக்கு அனுப்புவதாக யாழில் பல கோடி ரூபா மோசடி… 7 வருடம் டிமிக்கி: மனைவி வீட்டுக்கு இரகசியமாக வந்த போது ‘லபக்’!

Date:

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு, கோடிக்கணக்கான ரூபா மோசடி செய்த நபர் ஒருவர், 7 வருடங்களுக்கு மேலாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில், யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் பன்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட விஷேட குற்ற விசாரனை பிரிவின் பொறுப்பதிகாரி குணரோயன் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சுற்றிவளைவில் இந்த மோசடி நபர் கைது செய்யப்பட்டார்.

பிரான்ஸூக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு பெருந்தொகை பணம் மோசடி செய்ததாக கடந்த மே மாதம் யாழ் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் ஒருவரும், ஒக்ரோபர் மாதம் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும், பிரதான சந்தேகநபர் தலைமறைவானதால் அவரை கைது செய்ய முடியவில்லை.

பிரதான சந்தேகநபரின் மனைவி, பிள்ளைகள் அவரை பிரிந்து வாழ்வதாக வெளியுலகத்துக்கு காண்பிப்பதற்காக கொக்குவில், தலையாழி பகுதியில் வசித்து வந்துள்ளனர். பிரிந்து வாழ்ந்து வருவதாக வெளியுலகத்துக்கு காண்பித்தாலும், சந்தேகநபரான கணவன், இரவு வேளைகளில் வீட்டிற்கு இரகசியமாக வந்து சென்றுள்ளார்.

இந்த தகவல்,  மாவட்ட விஷேட குற்ற விசாரனை பிரிவிற்கு கிடைக்கபெற்றதையடுத்து, நேற்று அதிகாலை 1 மணியளவில் கொக்குவிலில் உள்ள வீட்டை பொலிசார் சுற்றிவளைத்தனர்.

அப்போது வீட்டில் உறக்கத்திலிருந்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்தனர்.

இவரிடம் மேற்கொண்ட விாரணைகளில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இந்த நபர்  2017இல் இருந்து தலைமறைவாக வசித்து வருகிறார். பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக பிரதான முகவராக செயற்பட்டு விடுதிகளில் தங்கியிருந்து பண மோசடிகள் செய்ததாகவும் மற்றும் கொழும்பில் தங்கியிருந்து ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்தது

இவருக்கு 2017ம் ஆண்டு மல்லாக நீதிமன்றில் பகிரங்க பிடியாணை  பிறப்பிக்கபட்டுள்ளது. மல்லாக நீதவான் நீதிமன்றில் 27இலட்சத்து 50ஆயிரம் பணமோசடியில் தேடபடும் சந்தேக நபராவார். வவுனியா நீதவான் நீதிமன்றில் 1கோடி 29 இலட்சம் ரூபா  மோசடி வழக்கில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக குறிப்பிடபட்டுள்ளது

இந்த சந்தேக நபருக்கு எதிராக வவுனியா, மல்லாகம், யாழ்ப்பாணம் போன்ற நீதிமன்றில் 3 கோடியே 50 ஆயிரம் ரூபா பணமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை நேற்று
குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கு பதிவு செய்து, யாழ்ப்பணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொழுது இவரை எதிர்வரும் 13திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிபதி ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்

இந்த சம்பவத்தை தொடர்ந்து, யாழ்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் பண்டார, பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டிற்கு அனுப்புவதாக குறி பண மோசடி செய்ததாக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யபட்டுள்ளதுன. இளைஞர்கள் வெளிநாடு செல்லும் மோகத்தினால் பதிவுசெய்யபடாத முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். பலர் ஆதாரங்கள் இல்லாமல் முறைப்பாடு செய்யாமல் உள்ளார்கள். எனவே  வெளிநாடு செல்லும் விவகாரத்தில் அவதானமாக இருக்குமாறு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” – திருமாவளவன் திடீர் அறிவிப்பு

“எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என விசிக தலைவர்...

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்றும் தொடரும்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை...

வவுனியாவில் கஞ்சாவுடன் 2 பொலிஸ்காரர்கள் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்